திருச்சி ரோட்டில் மண் குவியலை அகற்ற உத்தரவு

 

கோவை, ஜூலை 23: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி ரோடு சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சிங்காநல்லூர் பகுதிக்கு உட்பட்ட திருச்சி சாலையில் குடிநீர் திட்டப்பணி, பாதாள சாக்கடை திட்டப்பணி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (IOCL) திட்டப்பணி ஆகியவற்றுக்காக தோண்டப்பட்ட சாலையை ஆய்வுசெய்தார். இப்பணி மேற்கொள்ளப்பட்ட இடங்களில், சாலையோரம் மலைபோல் குவிந்துள்ள மண் குவியலை உடனடியாக அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டார். தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் தார்ச்சாலை சீராக அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துச்சாமி, மாநகராட்சி கவுன்சிலர் சிங்கை சிவா, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்