திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்

திருச்சி: வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள், வங்கதேசம், கென்யா, ரஷ்யா, சூடான், நைஜீரியன், ஐவேரிகோஸ்ட் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 160 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம் சிறையில் உள்ளவர்கள், போலி பாஸ்போர்ட் மற்றும் சட்டவிரோதமாக தங்கி இருந்தது உள்ளிட்ட வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டவர்கள். மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற வழக்குகளில் சிக்குபவர்கள் திருச்சியில் உள்ள முகாம் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு தங்களை விடுவித்து தங்கள் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 10 பேர் நேற்று காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர். …

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!