திருச்சியில் சின்னவெங்காயம் விலை மீண்டும் உயர்வு

திருச்சி: திருச்சியில் சின்னவெங்காயம் விலை மீண்டும் உயர்ந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிக்கு சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை உயர்ந்தது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 80க்கு விற்பனை ஆனது. வரத்து குறைந்ததால் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை உயர்வு காரணமாக சின்ன வெங்காயத்தை மக்கள் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர். அதன்பிறகு வரத்து அதிகரித்ததால் சின்ன வெங்காயம் விலை குறைந்தது. இந்நிலையில் நேற்று சின்ன வெங்காயம் மீண்டும் 80 ரூபாயாக விலை உயர்ந்து விற்பனை ஆனது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை