திருச்சியில் இருந்து சென்னை நோக்கி போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங்

 

செங்கல்பட்டு, ஜூன் 3: இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையில், தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள், போதை மருந்துகள் ஆகியவற்றை அதிரடி சோதனைகள் மூலம் பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும், போதைப் பொருள் பயன்படுத்துவதா ஏற்படும் ஆபத்துகள் குறித்து அரசு சார்பிலும், தனியார் தொண்டு அமைப்புகள் சார்பிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அப்துல் கலாம் டிரஸ்ட் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து திருச்சியிலிருந்து சென்னை வரை ஸ்கேட்டிங் செய்த சிறுவர்கள் போதை பொருட்களுக்கு எதிராக நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சென்னை நோக்கி செல்லும் முன்பாக நேற்று செங்கல்பட்டு நகருக்கு வந்தனர். அவர்களை செங்கல்பட்டு லயன்ஸ் சங்கம் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ஸ்கேட்டிங் நிகழ்வில் 5 முதல் 15 வயதுள்ள குழந்தைகள் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை