திருக்கழுக்குன்றம் அருகே அகழ்வாராய்ச்சி பணியில் சென்னை பல்கலை மாணவர்கள்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை  மாணவ. மாணவிகள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் 2ம் ஆண்டு (பயிற்சி) 19 மாணவர்கள், 19 மாணவிகள் என மொத்தம் 38 பேர் பல்கலைக்கழக தொல்லியல் துறை இயக்குனர் சௌந்தர்ராஜன் தலைமையில் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கன்னிக்கோயில் பாலாற்று பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின்போது, பழங்கால மதுபானம் பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஜார் எனப்படும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. பழங்காலத்தில் இந்த பகுதியில் அரசர்கள் மற்றும் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர்கள் வாழ்ந்துள்ளனர்.  இதனையொட்டி, தொல்லியல் துறையின் பழைய பதிவேடுகளில் உள்ள தகவல் மற்றும் சர்வே அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு