திருக்கண்டலம் கிராமத்தில் திமுக சாதனை விளக்க கூட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் எல்லாபுரம் தெற்கு ஒன்றியம் திமுக சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சாதனை விளக்கபொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.  எல்லாபுரம் திமுக ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, வக்கில் தேவேந்திரன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் முனிவேல், முருகன், இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் மதன், குப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய துணை செயலாளர் துர்கா ரமேஷ், ஊராட்சி செயலாளர் தியாகராஜன் வரவேற்றனர்.சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திமுக பேச்சாளர்கள் கரூர் முரளி, முரசொலி மூர்த்தி, சி.எச்.சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, லோகேஷ், சம்பத், சுமன் ஊராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். …

Related posts

குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பா?: ஐகோர்ட்

₹30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்..!!