திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயிலில் முதன்முதலாக இன்று ஏற்றப்படும் கொப்பரை தீபம்

செங்கல்பட்டு, நவ. 26: திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயிலில் இன்று முதன்முதலாக கொப்பரை மூலம் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு சுந்தரர் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது மருந்தீஸ்வரர் ஆலயம். இந்தநிலையில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம், பழனி, திருவண்ணாமலை, பருவதமலை ஆகிய 4 இடங்களில் மட்டும் கொப்பரை மூலம் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதன்படி இந்த 4 இடங்களிலுல் இன்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தற்போது முதன்முதலாக திருக்கச்சூரில் அமைந்துள்ள மருதீஸ்வரர் ஆலயத்திலும் மலைமேல் இன்று கொப்பரத்தில் தீபம் ஏற்றப்பட உள்ளது. எனவே தமிழகத்தில் 5வது இடமாக இந்த கோயில் கொப்பரை மூலம் கார்த்திகை மகாதீபம் ஏற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மகா தீபத்தை காண ஏராளமான மக்கள் கோயிலை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதற்காக கோயில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட உடையாளர்களைக் கொண்டு தீபம் ஏற்றுவதற்கான திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 111 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவதற்கான பணி நடந்து வருகிறது. பக்தர்கள் இருசக்கரம், 4 சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு நகரமன்ற உறுப்பினர் ஜெயந்தி ரவிச்சந்திரன் தலைமையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்