திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்

திண்டுக்கல், அக். 17: திண்டுக்கல் மாவட்டத்தில் திருவிழா காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் 9384808425 என்ற கைப்பேசி எண் வாயிலாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரின் அறிவுறுத்தலின்படி, வரும் பூஜை விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள், பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்களை 93848 08425 என்ற கைப்பேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அனைத்து ஆம்னி பஸ் நிலையங்களிலும் புகார் தெரிவிக்கும் எண்ணுடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆம்னி பஸ் நிர்வாகத்தினர் அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை