திண்டுக்கல் பாரதிபுரம் பாபா ஆலயத்தில் அன்னதானம்

திண்டுக்கல், மே 5: திண்டுக்கல் நாகல் நகர் அருகேயுள்ள பாரதிபுரத்தில் அமைந்துள்ளது  சீரடி சாய் பாபா ஆலயம். இங்கு நாள்தோறும் பாபாவிற்கு பூஜைகள் நடப்பது வழக்கம். குறிப்பாக பாபாவிற்கு உகந்த நாளான வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பாபாவிற்கு விபூதி அபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் காலையில் இட்லியும், மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் சிறப்பு பஜனையை தொடர்ந்து அனைவருக்கு சப்பாத்தி வழங்கப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை