திண்டுக்கல்லில் மல்லிகை பூச்செடிகளுடன் வந்து முற்றுகை

திண்டுக்கல், ஜூலை 18: நிலக்கோட்டை தாலுகாவில் முருகத்தூரன்பட்டி, சுக்கன்செட்டிபட்டி, கந்தக்கோட்டை, சிங்கம்பட்டி பகுதிகளில் பிரதானமாக மல்லிகை பூ விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக இந்த மல்லிகைப்பூ செடிகளில் பலன் தரும் சமயத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.

இதனை கட்டுப்படுத்த தரமான பூச்சி மருந்து கிடைக்கவில்லை எனவும், அரசு சார்பில் உரம் பூச்சி மருந்து கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி நேற்று திண்டுக்கல் தோட்டக்கலை துறை இயக்குநர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் மல்லிகை பூக்கள் கூடிய செடிகளுடன் வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ‘எங்கள் பகுதியில் போலியான பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்கப்படுகின்றன. இதனால் பூச்சி மருந்துகள் வேலை செய்யவில்லை. இதன் காரணமாக மல்லிகை பூச்செடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அரசு சார்பில் பூச்சிக்கொல்லி மருந்துக்கடை அமைத்து பூ விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை