தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரத்தை பாதுகாக்க பிளாஸ்டிக் போர்வை

ஊட்டி :  ஊட்டியில் மீண்டும் மழை துவங்கியுள்ள நிலையில் மலர் அலங்காரங்கள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்படுகிறது. நீலகிரி  மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்களுக்கு மேல்  தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு  மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்நிலையில், தமிழகத்தில் வரும் 16ம்  தேதிக்கு மேல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம்  தெரிவித்துள்ளது. எனினும், முன்னதாகவே நீலகிரி மாவட்டத்தில் மழை துவங்கி  பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஊட்டியில்  மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் சீசனை  முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு  மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. புல்மைதானத்தில் 2 ஆயிரம் தொட்டிகளை  கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில், பிளாஸ்டிக் ப்ரீ என்ற  ஆங்கில வார்த்தை அடங்கிய மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர்  அலங்காரத்தை தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து  செல்கின்றனர். இந்த மலர் அலங்காரம் மேரிகோல்டு மற்றும் இதர மலர்களை கொண்டு  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டியில் தற்போது மழை  பெய்யத்துவங்கியுள்ளதால், இந்த மலர் அலங்காரங்கள் பாதிக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேரிகோல்டு மலர்கள் அழுகும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. எனவே, மழையால் இந்த மலர் அலங்காரங்கள் மற்றும் மலர் செடிகள்  பாதிக்காமல் இருக்க நாள் தோறும் பூங்காக ஊழியர்கள் பிளாஸ்டிக் போர்வை  கொண்டு மலர் செடிகளை பாதுகாத்து வருகின்றனர்….

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு