தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தியில் 703 மனுக்கள் வரப்பெற்றன

 

கரூர், ஜூன் 26: கரூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடைபெற்ற ஜமாபந்தியில் நேற்று 703 மனுக்கள் வரப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் ஜூன் 18ம்தேதி முதல் 26 ம்தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்று வருகிறது. காலை 10மணி முதல் துவங்கி இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்தந்த பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி வருகின்றனர். அதனடிப்படையில், ஜமாபந்தியில் நேற்று, கரூர் 166, அரவக்குறிச்சி 120, குளித்தலை 103, கிருஷ்ணராயபுரம் 314 என மொத்தம் 703 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்றுள்ளன. தொடர்ந்து, வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி 26ம்தேதி வரை நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்