தாராட்சி கிராமத்தில் வீணாக கிடக்கும் மகளிர் குழு கட்டிடங்கள்: சீரமைத்து தர வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கான மகளிர் குழு கட்டிடங்களும், தாராட்சி கிராமத்தில் புதர் மண்டி காட்சியளிக்கும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்களையும்  சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை  வைத்துள்ளனர். தமிழகத்தில் மகளிர் சுய உதவிகுழுக்கள் மாநில அரசின் பெண்கள் மேம்பாட்டு கழகம் மூலம்,  முதன் முதலில் 1989ம் ஆண்டு துவங்கப்பட்டது.  மகளிர் சுய சார்பு பெற உதவியதால் இக்குழுக்கள் வேகமாக அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டன.  தமிழகத்தில் 2009ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 59 லட்சம் குழுக்கள் இயங்கி வந்தன. தற்போது, இந்த எண்ணிக்கை சுமார் 3 லட்சமாக அதிகரித்துள்ளது உள்ளது. மகளிர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது. அவற்றில் முக்கியமானது சுய தொழில் செய்யும் குழுக்களுக்கு உதவியாக, ஊராட்சி பகுதியில் பயிற்சி மற்றும் பனிமனை கூடங்கள் அமைத்து தரப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கான மகளிர் குழு கட்டிடங்கள் கட்டப்பட்டது.  அவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் சில மாதங்கள் பயன்படுத்தப்பட்டது. பின்னர், பெரும்பாலான சுய உதவிக்குழுவினர் பயன்படுத்தாமல்  பூட்டியே கிடக்கிறது. இதனால் மகளிர் குழு கூட்டங்கள் திண்ணை,  கோயில்,  வீடுகளின் மரத்தடியில் நடத்தப்படுகிறது.  இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.  இங்குள்ள  மகளிர் சுய உதவிக்குழுவி னருக்கு 2013 – 2014ம் ஆண்டு சுய உதவிக்குழு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை சுய உதவிக்குழுவினர் சில  வருடங்கள் மட்டுமே பயன்படுத்தினர்.  பின்னர், அதை அப்படியே பயன்படுத்தாமல் விட்டு விட்டனர்.இதனால், அந்த கட்டிடம் பயன்பாடு இல்லாமல் தற்போது புதர்கள் மண்டி  காட்சியளிக்கிறது.  மேலும், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கட்டிடத்தின் உள்ளே குடியிருந்து வருகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர் மண்டிக்கிடக்கும் சுய உதவிக்குழு கட்டிடத்தை சீரமைத்து, மகளிர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மகளிர் குழுவினரும்,  சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

சென்னை விமானநிலையத்தில் இருந்து பெரம்பூர் புறப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை