தாம்பரம் 49வது வார்டில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: திமுக வேட்பாளர் உறுதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 49வது வார்டில் அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளர் காமராஜ் உறுதியளித்தார். தாம்பரம் மாநகராட்சி, 49வது வார்டில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் தாம்பரம் நகர முன்னாள் துணைத் தலைவர் காமராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக வார்டு முழுவதும் உள்ள பொதுமக்களை வீடு வீடாக சென்று நேரில் சந்தித்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் வழிநெடுகிலும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து, மலர்கள் தூவி, மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 49வது வார்டுக்கு உட்பட்ட ஏழுமலை தெருவில் திமுக வேட்பாளர் காமராஜ் வீடு வீடாக சென்று, பொதுமக்களை நேரில் சந்தித்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். திமுக வேட்பாளர் காமராஜ் பேசுகையில், இந்த வார்டில் நான் வெற்றி பெற்றவுடன், இப்பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி குடிநீர் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார்.   இந்த வாக்கு சேகரிப்பின்போது கந்தசாமி, ராஜேந்திரன், பன்னீர்செல்வம், ஏகாம்பரம், கோபி, ராமசந்திரன், ஏழுமலை உட்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.  …

Related posts

சொல்லிட்டாங்க…

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்