தாந்தோணிமலை அருகே பெட்டிக்கடையில் பதுக்கிய 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

 

கரூர், ஜூன் 22: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.

மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் அருகே உள்ள பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக ஒருவர் மீது வழக்கு பதிந்து, ரூ. 9ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை