தாந்தோணிமலை அரசு கல்லூரி முன் அதிக வேகமாக சென்று பீதியை கிளப்பும் இருசக்கர வாகனங்கள்

 

கரூர், செப். 21: கரூர் தாந்தோணிமலை அரசுக் கலைக் கல்லூரி முன்பு மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் அதிக வேகத்தில் செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் தாந்தோணிமலை பிரதான சாலையோரம் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தும், சிலர் இரண்டு சக்கர வாகனங்களில் மாணவ, மாணவிகளை பீதிக்குள்ளாக்கும் வகையில் அதிக வேகத்தில் சென்று வருகின்றனர்.

மேலும், கல்லூரிக்கு செல்வதற்கும், கல்லூரி முடிந்து, பேருந்தில் ஏறுவதற்கும், மாணவ, மாணவிகள் சாலையை கடந்து செல்ல முடியாதபடி இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் செயல்பாடுகள் உள்ளது. எனவே, காவல்துறையினர் கண்காணித்து இந்த பகுதியில் அதிக வேகமாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் மெதுவாக செல்வதற்கான அறிவுரைகளை வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி