தருவைகுளம் அருகே ₹7 கோடியில் உயர்மட்ட பால பணி

குளத்தூர்,ஆக.29: தருவைகுளம் அருகே ₹7 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பால பணிகளை சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தருவைக்குளம், வெள்ளப்பட்டி செல்லும் சாலையில் தரைமட்ட பாலம் உள்ளது. இப்பாலம் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக இருந்துவந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சண்முகையா எம்எல்ஏவிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட சண்முகையா எம்எல்ஏ உடனடியாக தரைமட்ட பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்க எடுத்த நடவடிக்கையின் பலனாக ₹7 கோடியே 86ஆயிரம் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் அமைக்க டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் தொடக்கவிழா நடந்தது. சண்முகையா எம்எல்ஏ, ஒன்றிய சேர்மன் ரமேஷ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், உதவி பொறியாளர் காயத்ரி, ஆர்ஐ சுகுணா, விஏஓ மாரிமுத்து, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனை மரியான், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் காடோடி, கீழ அரசடி ஊராட்சி மன்றதலைவர் ராயப்பன், தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின்ஞானப்பிரகாசம், தயாளன், கிளை பிரதிநிதி பிரஸ்நேவ், மகளிரணி அன்னசெல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை