தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 6,557 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பின..!!

சென்னை: தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 பாசன ஏரிகளில் 6,557 ஏரிகள் 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எப்போதுமே வறண்டு காணப்பட்ட பாலாற்றில், தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மிக பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் பாசன ஏரிகள் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், * தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14,138 பாசன ஏரிகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி6,557 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டின. * தமிழ்நாட்டில் 3,070 பாசன ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளன.* 1,584 பாசன ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளன. * குமரி 611, செங்கல்பட்டு 519, கடலூர் 190, கள்ளக்குறிச்சி 128, காஞ்சிபுரம் 104, திண்டுக்கல் 73, அரியலூர் 58, திருவண்ணாமலை 654, தஞ்சை 444, தென்காசி 428, புதுக்கோட்டை 417, திருவள்ளூர் 416, நெல்லை 335 ஏரிகள் நிரம்பியுள்ளன.* விழுப்புரம் 468, ராணிப்பேட்டை 270, சிவகங்கை 180, தூத்துக்குடி 137, நாமக்கல் 79, பெரம்பலூர் 73, ராமநாதபுரம் 41 ஏரிகள் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகிறது. இவை கோடை காலத்தில் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

Related posts

3 குழந்தைகளுக்கு அரிய, சிக்கலான அறுவை சிகிச்சை: எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை சாதனை

மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை