தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,580 பேருக்கு கொரோனா: 1,509 பேர் டிஸ்சார்ஜ்: 22 பேர் பலி: சுகாதாரத்துறை தகவல்.!

சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,580 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.33 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.43 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,580 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 906 பேர் ஆண்கள், 674 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,35, 419ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 16,522ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 297 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 22 பேர் உயிரிழந்துள்ளார். 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,509 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 83 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு