தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

கடலூர்: தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலின் கோடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கோடியேற்றப்பட்டது. பின்னர், நடைபெற்ற தீபாராதனை மற்றும் சிறப்பு ஆராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கெடுத்தனர். திருநெல்வேலி:முக்கிய சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையிலேயே கோயில் நடைதிறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கொடி, பட்டம் பல்லக்கில் கோயில் உட்பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டு சின்ன கொடிமரம் அருகே வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கொடி மரத்துக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   தென்காசி:தென்காசி மாவட்டம் குற்றால திருக்குற்றால சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜனவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. சிதம்பரம், நெல்லையில் உள்ள சிவன் கோயில்களில் ஜனவரி 5-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 6-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது.    …

Related posts

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலங்கள் சீரமைக்கும் பணி விறுவிறு

மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் கூறியிருப்பது தற்கொலைக்கு சமம் :அமைச்சர் துரைமுருகன்