தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை நீடிக்கும். தமிழ்நாட்டில் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலத்தில் இடி, மின்னலுடன் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். நாமக்கல், கரூர் திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூரில் இன்று கனமழை பெய்யக்கூடும். திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சென்னை, செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் இன்று கனமழை பெய்யும். நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரியில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகை, மயிலாடுதுறையில் நாளை கனமழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகஸ்ட் 23ல் தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 24ல் தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலான மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆகஸ்ட் 24ல் சென்னை உள்பட வட தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; ஒரு சில இடங்களில் கனமழையும் பொழியும். அரபி கடலில் ஆகஸ்ட் 25 வரை தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை