தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒதுக்கீடுதாரர்கள் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை விற்பனை பத்திரம் வழங்கும் மேளா: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒதுக்கீடுதாரர்கள் நிலுவை தொகையை செலுத்தி நாளை முதல் 8ம் தேதி வரை விற்பனை பத்திரம் வழங்கும் மேளா நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்களில் பொதுமக்களுக்கு, வாரிய விதிமுறைகளின்படி, மாத தவணை திட்டம், மொத்த கொள்முதல் திட்டம் மற்றும் சுயநிதி திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பொதுவாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அலகுகளுக்குரிய முழு தொகையையும் ஒதுக்கீடுதாரர்கள் வாரியத்திற்கு செலுத்திய பின்னர், கிரயப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்நிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பணிகளை ஆய்வு செய்தபோது, வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்ற சில ஒதுக்கீடுதாரர்கள், ஒதுக்கீடுகளுக்குரிய முழு தொகையை செலுத்தியிருந்தும் விற்பனை பத்திரம் பெற முன்வரவில்லை என்பதையும், இதற்காக பலமுறை உரியக் கடிதம் சம்பந்தப்பட்ட ஒதுக்கீடுதாரர்களுக்கு அனுப்பப்பட்டும், சில ஒதுக்கீடுதாரர்கள் தங்களது இருப்பிட முகவரி மாற்றத்தால் கடிதம் சார்பு செய்ய முடியாமல் திரும்பப் பெறப்படுகிறது என்பதையும் அறிந்து அமைச்சர், இத்தகைய இனங்களில் முழு தொகையை செலுத்தியிருந்தும் விற்பனை பத்திரம் பெற்றிடாதவர்களும், நிலுவை தொகை செலுத்த வேண்டியவர்கள் நிலுவை தொகையை செலுத்தி விரைவில் விற்பனை பத்திரம் பெற்றிட ஏதுவாக, நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி 4.4.2022 (நாளை) முதல் 8.4.2022 வரை வாரியத்தின் அனைத்து கோட்டம் / பிரிவு அலுவலகங்களில் விற்பனை பத்திரம் வழங்கும் மேளா நடைபெற உள்ளது.  எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நிலுவை தொகை செலுத்த வேண்டியவர்கள் உடனடியாக தொகையை செலுத்திடவும், முழு தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள் அனைத்து மூல ஆவணங்களுடன் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மேலாளர் – விற்பனை மற்றும் சேவை அவர்களை அணுகி விற்பனை பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை