தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாநகர பொருளாளர் இல்ல திருமணவிழா

திருச்சி, ஏப். 11: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாநகர பொருளாளரும், ஏ1 ஹோட்டல் உரிமையாளருமான வி.பி.ஆறுமுகப்பெருமாள்- ஆ .மகராசி ஆகியோரின் மகள் கார்த்திகாவுக்கும், திருநெல்வேலி சீனிவாசன் நகர் கோ.சுப்பையா – பாலா ராணி ஆகியோரின் மகன் ஜெயந்தி நாதனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருச்சி- திண்டுக்கல் ரோடு கருமண்டபம் எஸ்.பி.எஸ்.திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடந்தது. இந்த விழாவில் மாநில தலைவர் விக்கிரம ராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விழாவில் திருச்சி சிவா எம்.பி, பழனியாண்டி எம்.எல்.ஏ, மேயர் அன்பழகன், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் துணை மேயர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், ,மாநகர தலைவர் எஸ் ஆர்.வி.கண்ணன், மாநில துணைத் தலைவர்கள் சின்னச்சாமி, ஜெ.சுப்பிரமணியன், எஸ்.கந்தன், என்.ரங்கநாதன், அப்துல் ஜபார் கே.எம்.எஸ்.ஹக்கீம், ரவிசங்கர், முகமது அபுபக்கர், மனோகரன், பி.ரங்கராஜன், உமாநாத், மாநில இணைச்செயலாளர்கள் அப்பாய்குமரன், பத்மா ரமேஷ், என்.ஆர்.குணா, மார்க்கெட் சின்னசாமி, .

கருப்பையா, காமராஜ், பழனி, ஜானகிராமன், ராஜாங்கம், காதர் மொய்தீன், கமலக்கண்ணன், திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில் பாலு, மாவட்ட பொருளாளர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் ராஜன் பிரேம்குமார், திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் அப்துல் ஹக்கீம், செயலாளர் கே.எம்.எஸ்.மைதீன், துணைத்தலைவர் அப்பாத்துரை, துணைச் செயலாளர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் திருமாவளவன், டோல்கேட் ரமேஷ், தொழிலதிபர்கள் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ், ஜெயகர்ணா, அம்மன் டி.ஆர்.ஒய்.சோமசுந்தரம், பிரபு நர்சிங் ஹோம் டாக்டர் ரவீந்திரன், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம், மற்றும் பேரமைப்பு நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், முக்கிய நண்பர்கள், உற்றார்.உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ1 ஹோட்டல் உரிமையாளர் வி.பி.ஆறுமுக பெருமாள், திருநெல்வேலி சீனிவாச நகர் கோ.சுப்பையா குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை