தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

 

விருதுநகர், ஜூலை 12: விருதுநகர் கலெக்டர் அலுவலக மாவட்ட நூலக அலுவலகத்தில், தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது. கட்டுரை போட்டியில், ராஜபாளையம் பள்ளி மாணவி தியாஸ்ரீ முதல் பரிசு ரூ.10 ஆயிரம், சிவகாசி பள்ளி மாணவி ஜெயரதி 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், சிவகாசி பள்ளி மாணவி தர்ஷா 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் வென்றனர்.

பேச்சுப் போட்டியில், மம்சாபுரம் பள்ளி மாணவர் முனீஸ்வரன் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், சிவகாசி பள்ளி மாணவி ஷேரன் பிரின்ஸஸ் லிடியா 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், க.மடத்துப்பட்டி பள்ளி மாணவர் கவிலன் 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட நுூலக அலுவலர் சுப்பிரமணியன் வழங்கினார்.
ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா செய்திருந்தார்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து