தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: மாணவர்களுக்கு 9ம் தேதி பேச்சு, கட்டுரை போட்டி

நாகப்பட்டினம், ஜூலை 7: தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை மாதம் 18ம் நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு நாகப்பட்டினம் சிஎஸ்ஐ.மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

கட்டுரை போட்டி ஆட்சி மொழித்தமிழ் என்ற தலைப்பிலும், பேச்சு போட்டி குமரி தந்தை மார்சல் நேசமணி, தென்னாட்டு பெர்னாட்சா பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகிய தலைப்பிலும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கு நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் முதல்கட்டமாக கீழ்நிலையில் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வட்டாரத்திற்கு 10 பேர் வீதம் மாணவர்களை தெரிவுசெய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை