தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் மீனவ சமுதாய மாணவர்களுக்குக் கூடுதல் இடஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் (B.F.Sc. degree programme) மீனவ சமுதாய மாணவர்களுக்குக் கூடுதலாக 15 சதவிகித மிகை இடஒதுக்கீடு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்களை 120லிருந்து 160 ஆக  உயர்த்தி  வழங்கி  ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் மூன்று உறுப்பு கல்லூரிகளாகிய, மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி, டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைஞாயிறு ஆகிய கல்லூரிகளில்  உள்ள 120 இடங்களுக்கு இளநிலை மீன்வள அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையின் போது,  மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 5% இடங்கள் சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி ஒதுக்கப்பட்டு வருகிறது.  இதன் அடிப்படையில் தற்பொழுது இப்பல்கலைக் கழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்கள் 120- ம், 5% சிறப்பு முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் படி (மிகை ஒதுக்கீடு) மீனவர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கு 6 இடங்களும் சேர்த்து, 2020-21-ம் கல்வியாண்டு வரை சேர்க்கப்பட்டனர்.  இதனடிப்படையில் சேர்க்கப்படும் 5% மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதிக்கட்டணம் ஆகியவற்றுக்கான உதவித் தொகை மீனவர் நலவாரியத்தால் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில், புதிய அரசின் தொலைநோக்கு திட்டத்தில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.எனவே, அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது, கூடுதலாக 15% மிகை இடங்கள் மீனவ குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழக இளநிலை மீன்வள அறிவியல் பாடப்பிரிவின் சேர்க்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  இதனடிப்படையில் மீன்வள இளநிலை அறிவியல் பட்டப்படிப்பிற்கு சேர விழையும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த குடும்பங்களிலிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்களின் தகுதியின் (Mark) அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். மேலும் இம்மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் போன்ற அனைத்துக் கட்டணங்களையும் மாணவர்களே செலுத்த வேண்டும்.இதன்படி 2021-22ஆம் ஆண்டிற்கான மீன்வள இளநிலை அறிவியல் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் இப்பல்கலைக்கழகத்தால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 120 இடங்களும், 5% சிறப்பு முன்னுரிமை இடஒதுக்கீட்டின் (மிகை ஒதுக்கீடு) படி  மீனவ குடும்பத்தை சார்ந்த 6 மாணவர்களும், மேலும் அரசால் தற்பொழுது ஒதுக்கப்பட்டு  உள்ள 15% மிகை இடஒதுக்கீட்டின் படி 18 மாணவர்களும் மொத்தம் 144 இடங்கள் (120+6+18), ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.  இதனுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென 10 இடங்கள், அயல் நாட்டவர்களுக்கென 3 இடங்கள், காஷ்மீரில் குடியேறியோர் மற்றும் காஷ்மீர் பன்டிட்/காஷ்மீர் இந்து குடும்பங்களுக்கென ஒரு இடம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவைச் சார்ந்த மாணவர்களுக்கென இரண்டு இடங்கள் ஆகிய அனைத்து இட ஒதுக்கீடுகளையும் இணைத்து தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மீன்வள அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான மொத்த இடங்கள் 2021-22 கல்வியாண்டு முதல் 160 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம் சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 7 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது