தமிழ்நாடு கட்டுமான நலவாரிய தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு கட்டுமான நலவாரிய தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் டாக்டர் பிஎஸ் சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில், தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், முகாமை தொடங்கி வைத்தார். தொழிலாளர் துறை உதவி ஆணையர் செண்பகராமன். தொழிலாளர் துறை உதவி ஆணையர்  (அமலாக்கம்) லிங்கேஸ்வரன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் டாக்டர் பிஎஸ் சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், பெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 12 மணிமுதல் 2 மணி வரையும், குன்றத்தூர் லாலா சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதியம் 3 மணிமுதல் 6 மணிவரையும் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். உதவி ஆய்வாளர்கள் பொன்னிவளவன், மாலா, தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சண்பிராண்ட் ஆறுமுகம், பாரத மாதா அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க மாநில தலைவர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை