தமிழில் நடிக்கும் உக்ரைன் நடிகை

சென்னை: உக்ரைன் நடிகை மரியா தமிழ் படத்தில் நடிக்கிறார். வெளிநாட்டு நடிகைகள் தமிழ் சினிமாவில் நடிப்பது புதிதல்ல. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கிறார் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா. தமிழ், தெலுங்கில் தயாராகும் சிவகார்த்திகேயனின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் வெளிவந்த ஜதிரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.இயக்குகிறார். சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மரியா ரியாபோஷாப்கா, போலந்து-உக்ரேனிய திரைப்படமான ‘ஈடர்’ உள்பட சில உக்ரேனிய படங்களில் நடித்துள்ளார். ‘ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். முறைப்படி மேற்கத்திய நடனம் கற்றுள்ள மரியா, உக்ரேனிய திரைப்படக் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றவர். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்