தமிழக மாணவர் காங்கிரசுக்கு 10 பேர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 10 பேரை நியமித்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழக மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. டிஜிட்டல் முறையில் இணையதளம் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் அதிக வாக்குகளை பெற்று மாநில தலைவராக சின்னதம்பி தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை தவிர மற்ற பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 10 பேரை நியமித்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.     இதுகுறித்து, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் நீரஜ் குந்தன் ஒப்புதலுடன், தமிழக மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களாக, 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வடசென்னை கிழக்கு- கெவின் குமார், கன்னியாகுமரி மேற்கு- ஷஜன் கிறிஸ்டா, விருதுநகர் கிழக்கு- மகேந்திரன், தூத்துக்குடி வடக்கு- மகாபிரபு, தூத்துக்குடி மாநகர் பிரவின் துரை, தூத்துக்குடி தெற்கு- சாமுவேல், திருப்பூர் வடக்கு- கரிமுல்லா, விழுப்புரம் மத்தி-தினேஷ்குமார், தஞ்சாவூர் தெற்கு- சிவா, கோவை வடக்கு- சூரஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்