தமிழக காவல்துறையில்‘ஸ்மார்ட் காவலர்’ செயலி அறிமுகம்: டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் கள பணியில் இருக்கும்போது ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனே அது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற செயலியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார். தமிழக காவல்துறையை நவீனமாக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்ேவறு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில் காவல் துறையில் களப்பணியில் பணியாற்றும் காவலர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உதவி கோரவும், அது தொடர்பாக தகவல்களை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற செயலி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியை நேற்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ெதாடங்கி வைத்தார். அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி காவல்துறையை நவீனமயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும், சிறப்பாக கையாளவும், ‘ஸ்மார்ட் காவலர்’ என்ற புதிய செயலியை நேற்று தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.‘ஸ்மார்ட் காவலர்’ செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்பொழுது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்