தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

 

சத்தியமங்கலம், ஏப்.24: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து வாகன சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்ததும் உள் மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை நிறைவு பெற்றது.

இதற்கிடையே, மாநில எல்லைகளில் தேர்தல் பறக்கும் படையினர் வழக்கம் போல் வாகன சோதனை மேற்கொள்வர் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் கர்நாடக மாநிலம் நோக்கி செல்லும் வாகனங்களை தீவிரமாக வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுவதாகவும், வாக்காளர்களுக்கு ஏதாவது பரிசு பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என கண்காணித்து வாகன சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை