தமிழகம் முழுவதும் 7 நாள் ‘ரெய்டு’ ஹெல்மெட் போடாத 5.39 லட்சம் பேர் சிக்கினர்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கடந்த 8ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, மாநிலம் முழுவதும் கடந்த 8ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக 5 லட்சத்து 39 ஆயிரத்து 59 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக நேற்று முன்தினம் மட்டும் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 69 ஆயிரத்து 653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கடந்த 8ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பிரிவுகளின் கீழ்  நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 38 ஆயிரத்து 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது….

Related posts

திடீர் கட்டண உயர்வை கண்டித்து தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை: மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்