தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே பசுமை மின்சக்தி வழித்தடம் அமைக்க ₹12,000 கோடி நிதி: ஒன்றிய அரசு ஒதுக்கீடு

புதுடெல்லி: இரண்டாம் கட்ட பசுமை மின்சக்தி வழித்தடம் அமைப்பதில் தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு இடையேயான பகிர்வு அமைப்புக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2ம் கட்ட பசுமை மின்சக்தி வழித்தடத் திட்டத்தின் மூலம் சுமார் 10,750 கி.மீ தூரத்துக்கு மின்பகிர்மான வழித்தடம் மற்றும் 27,500  மெகா வோல்ட் ஆம்பியர் மின்பரிமாற்ற திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டம் தமிழ்நாடு, கர்நாடகா, உ.பி., குஜராத், இமாச்சல், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடையே மின்தொகுப்பு ஒருங்கிணைப்பு மற்றும் 20 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை அனுப்ப உதவும்.மொத்தம் ₹12,031.33 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள இத்திட்டத்தில் ஒன்றிய நிதி உதவி, திட்ட செலவில் 33 சதவீதமாக, அதாவது ₹3,970.34 கோடியாக இருக்கும்.  இந்த மின்பகிர்வு அமைப்பு 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் வரை 5 ஆண்டு காலத்தில் அமைக்கப்படும்.   இத்திட்டம் 2030ம் ஆண்டுக்குள், 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அமைக்கும் இலக்கை எட்டுவதற்கு உதவும். மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் கிடைக்கும்….

Related posts

விழிஞ்ஞம் துறைமுகத்தால் உலக வரைபடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது: கேரள முதல்வர் பெருமிதம்

ஒன்றிய அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் மீண்டும் போராட்டம்?: அனைத்து எம்பிக்களையும் சந்திக்க முடிவு

வேலையின்மையால் இளைஞர்களின் எதிர்காலம் பூஜ்ஜியம்.. நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்துங்கள்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!!