தமிழகத்தில் 60 துணை ஆட்சியர்கள் மாற்றம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவு: விழுப்புரம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எம்.ஏ.பெருமாள்- துணை ஆட்சியர், சிறப்பு பறக்கும் படை, தமிழ்நாடு மாநில வாணிப கழகமான சென்னைக்கும்,காஞ்சிபுரம் கலால் மேற்பார்வை அலுவலர் ரமேஷ்குமார்- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை உதவி இயக்குனராகவும், காஞ்சிபுரம் கலால் மேற்பார்வை அலுவலர் பூமாலினி (மிடாஸ் கோல்டன் வடிப்பக தனியார் நிறுவனம், படப்பை)-  காஞ்சிபுரம் முன்னாள் ஆர்டிஓ முத்து மாதவன், தென்காசி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.இதேபோல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி இயக்குநர் (சென்னை) ஸ்ரீதரன் – காஞ்சிபுரம் கலால் மேற்பார்வை அலுவலராகவும், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் தனித் துணை ஆட்சியர் அருளானந்தன் (சென்னை)- கலால் மேற்பார்வை அலுவலர், ஐ.எம்.எப்.எல். பிரிவு மோகன் புரூவரீஸ் மற்றும் டிஸ்டில்லரீஸ் நிறுவனம், வளசரவாக்கத்திற்கும், காஞ்சிபுரம் ஆய்வுக்குழு அலுவலர் ரா.சுப்பிரமணியன்- காஞ்சிபுரம் எம்.ப்பி வடிப்பகம் மேவளூர்குப்பம்,  காஞ்சிபுரம் கலெக்டரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலமுருகன்- சிட்கோ மேலாளர் (நிலம் மற்றும் நிர்வாகம், சென்னை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் ஆர்டிஓ லாவண்யா (சென்னை மத்தியம், அம்பத்தூர்)- சென்னை கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது), சிட்கோ முன்னாள் மேலாளர் (நிலம் மற்றும் நிர்வாகம்) எச்.ஆர்.செல்வகுமாரி- தமிழ்நாடு சிமென்ட் கழக நிறுவனத்தின் முதுநிலை மேலாளராகவும், சென்னை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) டினா குமாரி- நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநரின் கூடுதல் நேர்முக உதவியாளர் மற்றும் உதவி நிலவரி திட்ட அலுவலராகவும்,வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக உதவி ஆணையர் மா.கார்த்திகேயன்- தமிழ்நாடு அரசு இ-சேவை முகமை துணை ஆட்சியராகவும்,  , நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநரின் முன்னாள் நேர்முக உதவியாளர் மற்றும் உதவி நிலவரி திட்ட அலுவலர் ச.ஆனந்தி- சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் அலுவலகம் (மத்தியம்) துணை ஆட்சியராக (நிர்வாகம்) உள்ளிட்ட 60 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை