தமிழகத்தில் மழை மற்றும் பாதிப்பு காரணமாக இன்று 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: மீட்புப்பணிகள் தீவிரம்..!!

சென்னை: தமிழகத்தில் மழை மற்றும் பாதிப்பு காரணமாக இன்று 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையைக் கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ  வேகத்தில் வீசியது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று வலுவை இழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனையடுத்து, தமிழகத்தில் மழை மற்றும் பாதிப்பு காரணமாக இன்று 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது….

Related posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குற்றங்களை தடுக்க 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: 24 மணிநேரமும் புகார் அளிக்க சிறப்பு எண்கள்; ஆலோசனைக்குப்பின் கமிஷனர் அருண் நடவடிக்கை

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைவு

வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்றிய கடலோர காவல்படை