தமிழகத்தில் புதிதாக நேற்று 1,949 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளால் தொற்று மெல்ல, மெல்ல குறையத்தொடங்கியது. இதையடுத்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் முதல் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மே 2வது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. தற்போது 2 ஆயிரத்திற்கு  கீழ் குறைந்துள்ளது.  இதுகுறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2011 பேர் நேற்று குணமடைந்தனர். இதுவரை 25,13,087 பேர் குணமடைந்துள்ளனர்.  சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20,117 ஆக உள்ளது. 38 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 34,197 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 226 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு