தமிழகத்தில் துயர சம்பவங்களில் உயிரிழந்த காவலர் உட்பட இருவர் குடும்பத்திற்கு அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி!

சென்னை : கோவிலில் திருட வந்த நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கும் சாமி தரிசனம் செய்துக் கொண்டிருந்த போது சாரம் விழுந்து உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 17ஆம் தேதி கோவில் உண்டியலை களவாட வந்த நபர்களால் கோவில் ஒப்பந்த காவலர் பாபு என்பவர் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலரை தாக்கிய நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.துயர சம்பவங்களில் உயிரிழந்த காவலர் உட்பட இருவர் குடும்பத்திற்கு அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி!சென்னை தம்பு செட்டி தெரு அருள்மிகு நாகப்பசெட்டி பிள்ளையார் கோவிலில் கடந்த 5ம் தேதி பூட்டியிருந்த கோவிலின் முகப்பில் நின்று சுவாமி தரிசனம் செய்த திவாகர் என்பவர் கோவில் திருப்பணிக்காக அமைக்கப்பட்டிருந்த சாரம் எதிர்பாராத விதமாக அவர் மீது விழுந்து உயிரிழந்தார். இந்த இரண்டு துயரச் செய்திகள் அறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அக்குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன் உயிரிழந்த காவலர் பாபு மற்றும் திவாகர் அவரது குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நிதியாக வழங்கினார்.இந்நிகழ்வின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது….

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி