தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 4,804 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் இருந்து 7,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 98 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,60,895 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில்,  4,804 தொற்று உறுதியானது. நேற்று ஒரு நாளில்  6,553 பேர் நேற்று குணமடைந்தனர். தமிழகத்தில் தற்போது, 23,97,336 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 291 பேருக்கு தொற்று உறுதியானது. கோவையில் 597 பேர், ஈரோடு 506 பேர், சேலம் 318 பேர், தஞ்சாவூர் 231, திருப்பூர் 294, செங்கல்பட்டு 238 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்துள்ளது.  98 பேர் இறந்துள்ள நிலையில் தமிழகத்தின் மொத்த உயிர் இழப்பு 32,388 ஆக உள்ளது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்