தமிழகத்தில் கெயில் குழாய் திட்டத்துக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் மீண்டும் தீவிரம்

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கெயில் குழாய் திட்டத்துக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்படுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தால் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பதோடு 200 கிராமங்கள் நேரடியாக பாதிப்பதாக தெரிவித்த விவசாயிகள் மாற்று பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தி 7 மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தினர்.விவசாயிகள் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த திட்டத்தை தற்போது மத்திய அரசு மீண்டும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இது விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே குழாய்கள் பாதிக்கப்படுவதை அறிந்த 7 மாவட்ட விவசாயிகள் நேரடியாக அங்கு சென்று பணிகளை தடுத்து நிறுத்தினர். குழாய்கள் பாதிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ள விவசாயிகள் பணிகளை நிறுத்தக்கோரி நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு