தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 972 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 25,911 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 972 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 35,53, 670 ஆக அதிகரித்துள்ளது.இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,453 பேர் குணமடைந்த வீடு திரும்பிய நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 35,06,229 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,033 ஆக உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 972 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு 84, சேலம் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 9, 408 தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்…

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்