தமிழகத்தில் ஒரே நாளில் 28,561 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று  வந்த 19,978 பேர்  குணமடைந்த நிலையில் நேற்று 28,561 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி   செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி அதிகபட்சமாக 39 பேர்  உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மக்கள்  நல்வாழ்வுத்துறை   நேற்று வெளியிட்ட   அறிக்கையில் : தமிழகத்தில் நேற்று   1,54,912 பேருக்கு    கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 28,561 பேருக்கு   தொற்று இருப்பது    உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவிற்கு  1,79,205 பேர் சிகிச்சை    பெற்று வருகின்றனர். நேற்று கொரோனாவிற்கு  சிகிச்சை பெற்று  வந்த 19,978 பேர்  குணமடைந்து வீடு திரும்பினர்.  தமிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டு    குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை  28,26,479 ஆக  உயர்ந்துள்ளது. இதேபோல்,    மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று  வந்த 39 பேர்  நேற்று சிகிச்சை  பலனின்றி   உயிரிழந்தனர். அதன்படி இதுவரை 37,112 பேர்   உயிரிழந்துள்ளனர். மேலும்  அதிகபட்சமாக நேற்று சென்னையில் 7,520  பேருக்கு  தொற்று கண்டறியப்பட்டது.  செங்கல்பட்டு 2,196, கோவை 3,390,   ஈரோடு 919,   காஞ்சிபுரம் 738,  கன்னியாகுமரி 1,148,  மதுரை 718,   சேலம் 937,  திருவள்ளூர் 998,  நெல்லை 756, திருப்பூர் 897,  திருச்சி 639, வேலூர் 262, விழுப்புரம் 322,   விருதுநகர் 550 பேருக்கு  தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை