தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்காக எச்சரிக்கை: குமரிக்கடல்  பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. …

Related posts

மெரினாவில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு போதிய ஏற்பாடு செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

பட்டாசுக்கடைகள் வைக்க விரும்புவோர் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மான நஷ்டஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு நடிகர் சிங்கமுத்து ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்