தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் வானிலை தகவல் அளித்துள்ளது. வடக்கு மற்றும் அதனையொட்டிய வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் வரும் 9ம் தேதி வரை, வரும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது….

Related posts

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!