தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள்; ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்தது தமிழக அரசு

சென்னை: தமிழகத்திற்கு நாளை முதல் கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாத இறுதிக்குள் கூடுதலாக 42.58 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 63,370 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், நாளை மறுநாள் 40,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் வர உள்ளன. 
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குள் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. மேலும் நாளை முதல் பொதுமக்கள் தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா சிறப்பு மையங்களிலும் செலுத்திக் கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது. 

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு