தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 2 தொகுதிகளில் காங்கிரசுடன் நேரடி போட்டி

சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா கட்சியின் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று ஜி.கே.வாசன் வெளியிட்டார்.  அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமாகா, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில் 12 தொகுதிகளை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எனினும் அதற்கு அதிமுக முன்வராததால் பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியில் தமாகாவுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்து அதிமுக – தமாகா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.   தமாகாவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ்சை சந்தித்த பின்பு ஜி.கே.வாசன் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் அறிவித்தார். இந்நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அதற்கான பட்டியலை நேற்று ஜி.ேக.வாசன் வெளியிட்டார். அதன்படி, திரு.வி.க. நகர் (தனி) தொகுதியில் கல்யாணியும், ஈரோடு (கிழக்கு) தொகுதியில் யுவராஜாவும், லால்குடி தொகுதியில் தர்மராஜூம், பட்டுக்கோட்டை தொகுதியில் என்.ஆர்.ரங்கராஜனும், தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலனும், கிள்ளியூர் தொகுதியில் ஜூட் தேவ்வும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிள்ளியூர் தொகுதியில் போட்டியிடும் ஜூட் தேவ், அந்த தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக பதவி வகித்த மறைந்த குமாரதாசின் மகன். தற்போது தமாகா இளைஞரணி மாவட்ட தலைவராக பதவி வகித்து வரும் நிலையில் அவருக்கு கிள்ளியூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   இந்த 6 தொகுதிகளில், திமுகவுடன் 4 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் காங்கிரசுடனும் நேரடியாக தமாகா போட்டியிடுகிறது….

Related posts

குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : வேல்முருகன்

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழலே எழவில்லை: திருமாவளவன் பேட்டி

ஆட்சியை காப்பாற்றவே பாஜவுடன் இபிஎஸ் கூட்டணி: அதிமுக அவைத்தலைவர் பேச்சு