தனியார் வாடகை கட்டிடங்களில் செயல்படும் அரசு குழந்தை மையங்களுக்கு வாடகை உயர்வு

சென்னை: வாடகைக் கட்டடங்களில் செயல்படும், 7,228 குழந்தைகள் மையங்களுக்கு மாத வாடகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகநலத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அறிவிப்பு:  சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர், 2021-2022ம் ஆண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த போது, ஏனையவற்றுக்கிடையே, ‘ஊரகப் பகுதி, நகர்ப்புற பகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தனியார் வாடகை கட்டடங்களில் செயல்படும் 7,228 குழந்தைகள் மையங்களுக்கு மாத வாடகை உயர்த்தி வழங்கப்படும்’ என்று அறிவிப்பு வெளியிட்டார். அமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையில், தனியார் வாடகைக் கட்டடங்களில் செயல்படும் 7,228 குழந்தைகள் மையங்களுக்கு மாத வாடகை, ஊரகப் பகுதிகளில் ரூ.1,000 ஆகவும், நகர்ப்புற பகுதிகளில் ரூ.4,000 ஆகவும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.6,000 ஆகவும் உயர்த்தி வழங்கி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்