தனிநபர் பிரிவில் அசத்திய குகேஷ்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளைக் குவித்து உலக அளவில் கவனம் ஈர்த்த தமிழக வீரர் டி.குகேஷ் தனிநபர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மொத்தம் 11 சுற்றில் அவர் 8 வெற்றி, 2 டிரா மற்றும் ஒரு தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.* இந்திய வீரர் நிஹல் சரினும் தனிநபர் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.* இந்தியாவின் எரிகைசி அர்ஜுன் தனிநபர் வெள்ளிப் பதக்கமும், தமிழக நட்சத்திரம் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.* இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில், மகளிர் பிரிவில் இந்திய அணி முதல் முறையாக வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியது. * ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கங்களை கைப்பற்ற முடியாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக 2 குழு வெண்கலம், 2 தனிநபர் தங்கம், 1 தனிநபர் வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றதால், நடப்பு தொடரில் அதிக பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்த அணி என்ற பெருமையை தட்டிச் சென்றது.* முதல் முறையாக செஸ் ஒலிம்பியாடில் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி, ஒரு போட்டியில் கூட தோற்காமல் முதலிடம் பிடித்தது. …

Related posts

ஐசிசி டி20 போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா

உலகக்கோப்பையுடன் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள்

உலகக்கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்!!