‘தனித்துவமானவர்கள் என்ற எண்ணமே பெண்களை அழகாக்கும்’ – பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து பேச்சு

சண்டிகர்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான இளம் பெண் ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இஸ்ரேலின் எய்லாட் நகரில்  நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் பட்டத்தை வென்ற அவர், மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பெற்று தந்திருப்பதை நான் மிக பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார். நான் மிகவும் ஒல்லியாக இருந்ததால் தன்னை சிலர் அவமானப்படுத்தியதாகவும், தான் உருவக்கேலிக்கு ஆளானதாகவும் தெரிவித்தார். உருவக்கேலி போன்ற சவால்கள் தான் வாழ்க்கை என்ன என்பதை பற்றிய தனது பார்வையை மாற்றியதாகவும், உருவ அமைப்பை விட தாம் தனித்துவமானவர்கள் என்ற எண்ணமே பெண்களை அழகாக்கும் என்றும் ஹர்னாஸ் சாந்து தெரிவித்தார். இலக்கை அடைய துடிக்கும் பெண்களே வெளியே வாருங்கள்; உரக்க பேசுங்கள்; கடினமாக உழையுங்கள்; அப்போது இலக்கு கைகூடும் என கூறிய ஹர்னாஸ் சாந்து வாய்ப்பு கிடைத்தால் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்….

Related posts

கொல்கத்தா RG கார் மருத்துவமனை மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!!

முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா வெற்றி..!!

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு..!!