தஞ்சையில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்: போலீசார் தீவிர விசாரணை

தஞ்சை: தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூரில் வடக்கு வீதி சாலையில் இரண்டு புறமும் சிறிய கடைகள் உள்ளன. அங்கு டீக்கடைக்கு அருகில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை உள்ளது. இந்த சிலை சிமெண்ட்டால் செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளது. இந்த சிலை நேற்று இரவு வரை சேதப்படுத்தப்படாமல் இருந்துள்ளதை மக்கள் பார்த்துள்ளனர். காலையில் பார்த்த போது சிலையை உடைக்காமல் அப்படியே பெயர்த்து எடுத்துள்ளனர். சிலையை கடத்தி அப்புறப்படுத்தி பக்கத்து கடையில் வைத்துள்ளனர். இதனுடைய நோக்கம் இதுவரை தெரியவில்லை.யாரும் குடிபோதையில் இவ்வாறு செய்துள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. இதுதொடர்பாக தகவல் தெரிந்ததும் அதிமுக பிரமுகர்கள் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை அகற்றியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அதன்பிறகு சிலையை மீட்டு அதேஇடத்தில் மீண்டும் பொறுத்தப்பட்டுள்ளது….

Related posts

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மீண்டும் துவங்கிய ரோப் கார் சேவை: 5 நாளில் 1,230 பக்தர்கள் பயணம்

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்