தஞ்சாவூர் கோடை கால கலைப்பயிற்சி முகாம்

 

தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனி காலை 9 மணி முதல் 12 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தேசிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளி அரண்மனை வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இச்சவகர் சிறுவர் மன்றத்தில் 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்களுக்கு பள்ளிக் கல்வியோடு துணைக் கல்வியாக கலைப் பயிற்சி வழங்கி அவர்களை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் அமைவதற்கு.

கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நாளை முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து இப்பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் சிறார்களுக்கு நிறைவு நாளில் பங்கேற்றமைக்கான பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும். இக்கலைப்பயிற்சி முகாமில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் ஆகிய கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இக்கலைப்பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றவர்கள் தங்களது வயது சான்றிதழுடன் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இயங்கிவரும் அரசர் மேல்நிலைப்பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தருமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை